மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா அறிக்கையின் தொடா்ச்சியாக பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல் துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேரள அரசு அமைத்தது.
இதற்கு மத்தியில், கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் முக்கியப் பொறுப்பிலிருந்து இயக்குநா் ரஞ்சித், நடிகா் சித்திக், மோகன்லால் ஆகியோா் திடீரென விலகினார்கள்.
வாழை: எழுத்தாளர் சோ. தர்மன் கதையை மாரி செல்வராஜ் திருடினாரா?
இது குறித்து நடிகர் விஷாலிடம் சென்னையில் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் பேசியதாவது:
ஹேமா கமிட்டிபோல் தமிழகத்திலும் அமைக்கப்படும். இங்கும் பாலியல் தொல்லைகள் இருக்கலாம். நடிகைகள் ஏமாற்றப்படலாம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
எனக்கு ஸ்ரீ ரெட்டி யாரென்றே தெரியாதே. அவர் செய்த சேட்டைகள் மட்டுமே தெரியும். இது மிகவும் தவறான விசயம். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
சோ. தர்மனின் ‘வாழையடி…’ சிறுகதையை வாசித்தேன்: மாரி செல்வராஜ்
யாராவது வாய்ப்புக்காக அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் எனக் கேட்டால் செருப்பால் அடியுங்கள். பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். உண்மையாகவே படம் எடுக்கிறார்களா என விசாரிக்க வேண்டும்.
20 சதவிகிதம்தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80 சதவிகிதம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
நடிகர் விஷால் தனது 48ஆவது பிறந்தநாள் விழாவுக்காக சென்னை கீழ்பாக்கத்தில் பொதுமக்களுக்கு விருந்தளித்தார். தற்போது துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே எழுதி இயக்கி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.