85,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்! நிஃப்டியும் புதிய உச்சம்!

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 85,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(செப்.24) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,860.73 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், 10.05 மணியளவில் 80.74 புள்ளிகள்அதிகரித்து 85,009.35 புள்ளிகளை எட்டியது.

இதன்மூலமாக சென்செக்ஸ் முதல்முறையாக 85,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 25,921.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 10.05 மணிக்கு அதிகபட்சமாக 29.15 புள்ளிகள் அதிகரித்து 25,968.20 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

பின்னரே பங்குச்சந்தை சரிந்த நிலையில் பிற்பகல் 12.55 நிலவரப்படி ஏற்றம் கண்டு வருகிறது.

நிஃப்டி50 இல் டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, பவர் கிரிட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் எம்&எம் ஆகிய நிறுவனங்கள் அதிக ஏற்றம் கண்டன.

ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!