9-வது முறை கடித்தால் மரணம்.. கனவில் வந்து சொன்ன பாம்பு

9-வது முறை கடித்தால் மரணம்.. கனவில் வந்து சொன்ன பாம்பு.. உ.பியில் பயங்கரம்

உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே. இவருக்கு தற்போது பாம்பு என்று காதில் கேட்டாலே உயிர் பயம் வந்து விடுகிறது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த இளைஞரை, கடந்த ஜூன் 2 ஆம் தேதி பாம்பு ஒன்று கடித்துள்ளது. வீட்டில் படுத்திருந்தவரை பாம்பு கடித்ததும், அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், குணமடைந்து வீடு திரும்பியவருக்கு அடுத்தடுத்து ஒரு வார இடைவெளியில் இருமுறை பாம்பு சீண்டியுள்ளது. மூன்றாவது முறை சிகிச்சை அளித்த மருத்துவர், பாம்பு கடியில் இருந்து தப்பிப்பதற்கு வேறு இடத்திற்கு சென்று தங்குமாறு இலவச டிப்ஸ் கொடுத்துள்ளார். இதையடுத்து, தனது கிராமத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இருந்தபோதும் விடாது கருப்பு என்பது போல், 4 ஆவது வாரமும் விகாஸை பாம்பு கடித்துள்ளது. என்ன செய்வது என்று தலைசுற்றிய இளைஞர், அடுத்தடுத்து தனது உறவினர்கள் வீட்டுக்கு இடம் பெயர்ந்தும், பாம்புக் கடியில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

விளம்பரம்

Also Read :
V என்ற எழுத்தில் உங்க பெயர் தொடங்குகிறதா..? உங்களின் தனித்துவமான குணங்கள் இவைதான்!

என்ன நடக்கிறது என்று குடும்பத்தினர் குழம்பியுள்ள நிலையில், தொடர்து 7 முறையும் வார இறுதி நாட்களிலேயே சொல்லிவைத்தது போல், பாம்பு கடித்ததை கேட்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். பாம்புக் கடிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்ததுடன், விகாஸ் எப்படி பாம்பு கடிக்கு ஆளாகிறார் என்பதை கண்டறிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாம்புக் கடிக்கு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நிதியுதவி அளிக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்திடம் விகாஸ் துபே கோரிக்கை வைத்துள்ளார்.

விளம்பரம்

ஏழு முறையும் செத்துப் பிழைத்த விகாஸ் கூறுகையில், ஒவ்வொரு முறை பாம்பு சீண்டுவதற்கு முன்பு, தனதுக்கு கனவு வரும் என்று தெரிவித்துள்ளார். அதில், அபசகுணமாக எதையாவது குறிக்கும் வகையில் கனவில் எச்சரிக்கை சிக்னல் வரும் எனவும் கூறியுள்ளார். கடைசியாக கனவில் வந்த பாம்பு, அதிர்ச்சித் தகவல் ஒன்றை கூறியதாக குண்டை போட்டுள்ளார்.

ஒன்பதாவது முறை பாம்பு கடித்தால், நீ இறந்து விடுவாய் என கனவில் வந்த பாம்பு கூறியதாக வினோத கதை ஒன்றை விகாஸ் தெரிவித்துள்ளார். 7 முறை பாம்பு சீண்டிய போதும், என்ன பாம்பு கடித்தது, ஒரே பாம்பு மீண்டும் மீண்டும் கடித்ததா அல்லது வெவ்வேறு பாம்பா என்பதும் புலப்படவில்லை… இதனால், 3 பேர் கொண்ட மருத்துவ குழுவின் விசாரணையில் தான் பாம்புக்கடி சம்பவம் விநோதமா? வேடிக்கையா? என்பது தெரியவரும்..

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
uttar pradesh

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு