96 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரிக்கை: மேயர், ஆணையர் பதிலளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

96 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரிக்கை: மேயர், ஆணையர் பதிலளிக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் மத்தியில் விவாதம் எதுவும் நடத்தாமல் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி சுயேச்சை கவுன்சிலர்களான சாந்தி துரைராஜன், பிரவீண் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், எந்த விவாதமும்நடைபெறாமல் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்கள் சட்டவிரோதமானவை என்பதால், அந்த தீர்மானங்களும், அன்றைய தினத்தில் நடைபெற்ற கூட்டமும் செல்லாது என அறிவிக்க வேண்டும், எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இதுதொடர்பாக காஞ்சிபுரம் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி