Anant -Radhika Wedding: ரஜினி, அமிதாப்பிடம் ஷாருக்கான் செய்த செயல்

Anant -Radhika Wedding : ரஜினி, அமிதாப்பிடம் ஷாருக்கான் செய்த செயல் – சுவாரஸ்ய நிகழ்வுகள்

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அனைவரின் மனதையும் கவரும் வகையில் பாலிவுட் கிங் என்றழைக்கப்படும் ஷாருக்கான் தோன்றினார். நட்சத்திரங்கள் நிறைந்த இந்த திருமணத்தில் பங்கேற்றிருந்த ஷாருக்கான். அங்கு அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோரை வணங்கினார். பின்னர் அவர்களுடன் கைகுலுக்கிய ஷாருக்கான். அதே வரிசையில் அமர்ந்திருந்த சச்சின் டெண்டுல்கருடன் கைகுலுக்கினார்.

ஷாருக்கான் பிறரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோரின் கால்களை தொட்டு வணங்கி ஆசிபெற்றார். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அத்துடன், மூத்த நடிகர்கள் மீது ஷாருக்கான் வைத்துள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தியது.

விளம்பரம்விளம்பரம்

பின்னர், திருமண விழாவில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியுடன் ஷாருக்கான் நடனமாடியதோடு, சல்மான்கான் உடனும் நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இதையும் படிங்க:
ரஜினி முதல் தோனி வரை… ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள்!

முன்னதாக தனது மனைவி கௌரி கானுடன் திருமணத்திற்கு வந்த ஷாருக்கான் ஆலிவ் பச்சை நிற இந்தோ-மேற்கத்திய உடையுடன் வந்திருந்தார்.

விளம்பரம்

அதேபோல், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ், கிம் கர்தாஷியன், ஜான் சீனா, கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பால ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Amitabh Bachchan
,
Anant Ambani
,
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Rajinikanth
,
shah rukh khan

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி