மாநில செய்திகள்

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விஷ சாராய வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 68 பேர் உயிரிழந்த…

Read more

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா

அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு சசிகலா வருகை…

Read more

தமிழகத்தில் வழங்கப்பட்ட முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை கோரிக்கை

மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவைக்கு கடந்த 11, 12-ந் தேதிகளில் வருகை புரிந்த மத்திய…

Read more

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அவர்களின் சொந்த ஊருக்கு பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு, உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்கவேண்டும். குறிப்பாக உத்தரகாண்ட்…

Read more

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை – ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசாணைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சியில், விவசாய பெருங்குடி மக்கள்,…

Read more

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் திருமாவளவன்

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சென்னை, தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், கடந்த நாடாளுமன்ற…

Read more

சென்னையில் நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு

சென்னையில் நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்கள் விதிகளை மீறி, பொறுப்புணர்வு இன்றி ஆங்காங்கே கட்டுமான இடிபாட்டு கழிவுகளை கொட்டி…

Read more

‘விமர்சனம் செய்வதற்கு முன் திருமாவளவன் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ – எல்.முருகன்

பிற கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன் திருமாவளவன் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை, மதுரை மாவட்டம் மேலூரில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "பிற…

Read more

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த தந்தை – மகள் பலி

இளைய மகள் ஆஷிகா சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் ( 40 ) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் பத்தாளப்பேட்டையில் பெல் ஊழியர்களால் நடத்தப்படும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உறுப்பினராக…

Read more

ஓணம் பண்டிகை: தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனை

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை சந்தையில் 150 டன் பூக்கள் விற்பனை ஆகின. சென்னை, நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில், மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஏற்கெனவே…

Read more