Dating app யூஸ் பண்றீங்களா… உஷார்!

Dating app யூஸ் பண்றீங்களா… வலைவிரிக்கும் மோசடி கும்பல்… லட்சங்களில் பணத்தை இழந்த இளைஞர்!

தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மனிதர்களை ஏமாற்றும் விதமும் மாறிக் கொண்டே வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் Dating app மூலம் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. அப்படி டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு காவல்துறை விசாரணை மூலம் அம்பலமாகி, இப்படியுமா ஏமாற்றுகின்றனர் என அதிர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகி வந்த இளைஞர் ஒருவர், Dating app மூலமாக ஒரு பெண்ணை Date செய்துள்ளார். அந்த பெண், தனது வாட்ஸ் அப் நம்பரை அனுப்பியதை தொடர்ந்து, இருவரும் வாட்ஸ் அப் மூலம் பழகி வந்தனர். இளைஞர் அந்தப் பெண்ணை சந்தித்துப் பேச விரும்பிய நிலையில், அதனை வாட்ஸ் அப்பில் தெரிவித்தார்.

விளம்பரம்

உடனே அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்ததுடன், டெல்லியின் பரபரப்பான பகுதியில் உள்ள ஒரு Pub-ன் பெயரைக் கூறி அங்கு வரும்படி கூறினார். ஆனால், அந்த இடத்தை பற்றி அறியாததால், எப்படி வர வேண்டும் என அந்த இளைஞர் வழிகேட்டதும் ஒரு மெட்ரோ ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கு சந்தித்தார். இருவரும் சேர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி Pub உடன் கூடிய Cafe-க்கு சென்றனர். அந்தப் பெண் தனக்கு விரும்பிய உணவு வகைகளை ஆர்டர் செய்தார்.

விளம்பரம்

இளைஞருக்கும் எந்த சந்தேகமும் எழாததால், அமைதியாக இருந்தார். ஆனால், திடீரென Cafe-வின் menu card-ல் இல்லாத சிலவற்றை அந்தப் பெண் ஆர்டர் செய்ததால், இளைஞர் திகைத்தார். எனினும் முதல் டேட் என்பதால் பொறுமை காத்தார்.

திடீரென அந்தப் பெண்ணுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்த நிலையில், அவசரமாக செல்ல வேண்டும் என கூறி, அரக்க பறக்க அங்கிருந்து சென்று விட்டார் இளம்பெண்….. சரி முதல் டேட் இப்படி கனவாக போய் விட்டதே என்று நொந்தபடியே, பில் செட்டில் செய்யும்படி அங்கிருந்த ஊழியரிடம் கேட்டார் அந்த இளைஞர். பில் வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு தன்னை மையமாக வைத்து ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தார்… ஏனென்றால் பில் தொகை ஒரு லட்சத்து இருபதாயிரம்….

விளம்பரம்

இதையும் படிக்க:
மீண்டும் குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை… வெளியான புதிய விலைப்பட்டியல்… எந்தெந்த ஊர்களில் எவ்வளவு தெரியுமா?

இவ்வளவு தொகைக்கு எப்படி பில் வந்தது எனக் கேட்ட போது, அந்த Cafe-யில் இருந்த மேலாளர்கள் மற்றும் பவுன்சர்கள், மிரட்டும் தொனியில் அந்த இளைஞரிடம் பேசினர். வேறு வழியின்றி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை செட்டில் செய்து விட்டு வெளியே வந்தார். எனினும் மனம் பொறுக்காமல் போலீசில் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட Pub உடன் கூடிய Cafe-வின் உரிமையாளர் Akshay Pahwa என்பவரை போலீசார் விசாரித்தனர். அப்போது தான் அதிர வைக்கும் உண்மை வெளியானது.

விளம்பரம்

இந்த Dating app மோசடி பல காலமாகவே நடந்து வருவதாகவும், Dating app மூலம் ஈர்க்கப்பட்டு பெண்ணுடன் வரும் ஆண்கள், இதுபற்றி புகார் அளித்தால், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என பயந்து, வெளியே சொல்ல மாட்டார்கள் என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், Dating app மூலம் அறிமுகமாகும் இளம்பெண்ணுக்கு பில் தொகையில் 15% வழங்கப்படும் என்றும், Pub-ல் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கும் 45%மும், மீதமுள்ள 40% பணம் Pub உரிமையாளருக்கு சென்று விடும் என்பதும் தெரிந்தது.

விளம்பரம்
உடலில் நீர்ச்சத்து குறையும்போது ஏற்படும் 6 அசாதாரண அறிகுறிகள்.!
மேலும் செய்திகள்…

டெல்லியில் மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களிலும் இந்த Dating app மோசடி நடப்பது அம்பலமாகி இருக்கிறது. ஹைதராபத்தின் Hitech City மெட்ரோ ரயில் நிலையம் அருகே செயல்படும் ஒரு கிளப் மீதும் சமூக வலைதளங்களில் தொடர் புகார்கள் வருகின்றன. Dating app மூலம் அறிமுகமான பெண்ணுடன் அங்கு சென்ற இளைஞர்கள் 40 ஆயிரம், 20 ஆயிரம் என பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Cheating case
,
Crime News
,
online crime

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து