Dr Radhakrishnan Award 2024 : 355 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிய அமைச்சர் உதயநிதி

05.09.2024 – குடியரசு முன்னாள் தலைவரும் ஆகச் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே தன்னிகரற்ற வகையில், தனித்துவமாகச் செயல்பட்டும் வரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தப் பெயர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றப்பட்டது. சென்னை வண்டலூரில் ஆசிரியர் தின நிகழ்வும் விருது விழாவும் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கி வருகிறார்.  

Watch Complete Video Here : https://www.youtube.com/live/CGxA3eTpXVs

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

375 விருதுகள்

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்கம சார்பில், சிறந்த பள்ளிகள், ஆசிரியர்கள் என இரு பிரிவுகளில் மொத்தம் 375 விருதுகள் வழங்கப்படுகின்றன.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!