EVMக்கு வரும் OTP? எலான் மஸ்க் குற்றச்சாட்டு.. என்ன தான் நடக்கிறது?

EVMக்கு வரும் OTP? எலான் மஸ்க் குற்றச்சாட்டு.. என்ன தான் நடக்கிறது?

ஈவிஎம் சர்ச்சை?

மின்னணு வாக்குப்பதிவு எந்திரமான ஈவிஎம்-களை ஹேக் செய்து தரவுகளை மாற்ற முடியும் என அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈவிஎம்-மை திறக்கும் ஓடிபி வரக்கூடிய செல்போனை பாஜக கூட்டணி எம்.பி. பயன்படுத்தியதாக மும்பை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஈவிஎம்-கள் மீதான நம்பகத்தன்மை குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தன. வாக்கு எண்ணிக்கையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வென்ற நிலையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் வாய்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டுப்போட்டு விட்டதாகக் கூறினார்.

விளம்பரம்

இந்நிலையில், நாட்டிலேயே மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் ஒரு மக்களவை உறுப்பினர் வெற்றிபெற்ற மும்பை வடமேற்கு தொகுதியில் புதுவித புகாரை சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சி கிளப்பி உள்ளது. அங்கு அந்தக் கட்சியின் வேட்பாளர் (உத்தவ் தாக்ரே சிவசேனா) அமோல் கிர்த்திகர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், ஆளும் சிவசேனா கட்சியின் வேட்பாளர் ரவீந்தர் வைக்கரின் வேண்டுகோளை ஏற்று கோரிகாவ்ன் வாக்கு மையத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதன் முடிவில், 48 வாக்குகள் வித்தியாசத்தில் ஷிண்டே தரப்பு சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைக்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் தாக்கரே தரப்பு அதிர்ச்சியுற்றது.

விளம்பரம்

வாக்கு எண்ணும்போதே, வேட்பாளரும் சிவசேனா எம்.பி.யுமான ரவீந்தரின் மருமகன் மங்கேஷ் பண்டில்கர், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் பயன்படுத்தியதாக சுயேச்சை வேட்பாளர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிக்க:
நீட் நுழைவுத் தேர்வில் நடந்த விதவிதமான மோசடிகள்… அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்!

மேலும் வாக்குப் பதிவு இயந்திரத்தை திறப்பதற்கான ஓடிபி வரும் தினேஷ் குரவ் என்ற அதிகாரியின் செல்போனை மங்கேஷ் பண்டில்கர் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த புதுவிதமான புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன் பயன்படுத்தியதாக பண்டில்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனிடையே, விரைவில் தேர்தலை எதிர்நோக்கும் அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க், ஈவிஎம்-களை பயன்படுத்துவதை நாம் நிறுத்தவேண்டும் என்றும், மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலமாக அவற்றை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது பேசுபொருளானது.

மஸ்குக்கு ஆதரவாக பதிவிட்ட ராகுல் காந்தி, வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி என்றும் அதனை ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் தேர்தல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை இன்மை, கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

இதனிடையே, மஸ்கின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள, கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் உள்ள ஈவிஎம்களை ஹேக் செய்யவே முடியாது என்றும் அதற்கேற்றாற் போல் அவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:
எதையும் ஹேக் செய்ய முடியும்.. ராஜீவ் சந்திரசேகரின் பதிவுக்கு எலான் மஸ்க் பதில்!

மேலும், இன்டர்நெட், வைபை போன்றவற்றுடன் இணைக்கப்படும் அமெரிக்க ஈவிஎம்-களை வேண்டுமானால் ஹேக் செய்யலாம் என மஸ்குக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். ஆனால், அந்த போஸ்டிலேயே பதில் அளித்துள்ள மஸ்க், ஹேக் செய்யமுடியும் என மீண்டும் கூறியுள்ளார். அதை ராஜீவ் சந்திரசேகர் மீண்டும் ஏற்க மறுத்துள்ளார்.

விளம்பரம்

இந்த களேபரங்களுக்கு இடையே செல்போனுடன் ஈவிஎம்களை இணைக்கவே முடியாது என மும்பை புறநகர் தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈவிஎம்-ஐ திறப்பதற்கு OTP எல்லாம் பயன்படாது. அதில் வை-பை இணைப்பு எல்லாம் வேலை செய்யாது. இது ஒரு டிஜிட்டல் உபகரணம். தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவும் கிடையாது. தவறான செய்தி வெளியிட்ட நாளிதழ் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியிடம் கேட்டபோது ஈவிஎம்களுடன் செல்போனை இணைக்க வாய்ப்பே இல்லை என்றும், ராணுவத்தில் இருப்போர் செலுத்தும் தபால் வாக்குகள் மின்னணு முறையில் அவர்களுக்கு அனுப்பப்பட்டு, கியூ ஆர் கோடுடன் மீண்டும் தபாலில் அனுப்பப்படும் என்றும் அதை இங்கு ஸ்கேன் செய்தால் சரிபார்க்க ஓடிபி வரும் என்றும் விளக்கம் அளித்தார்.

விளம்பரம்

ஈவிஎம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கவேண்டும் என்பதே எதிர்ப்பாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Elon Musk
,
EVM Machine
,
PM Narendra Modi

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?