EVM எண்ணிக்கையில் தோல்வி, தபால் வாக்கில் வெற்றி

EVM எண்ணிக்கையில் தோல்வி, தபால் வாக்கில் வெற்றி – சறுக்கிய பின் சாதித்த எம்.பி.க்கள்!

வாக்கு எந்திரம்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிசயிக்கத்தக்க வகையில் 2 எம்.பி.க்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது பெரும்பாலான வேட்பாளர்கள் முதலில் பின்னடைவை சந்தித்தும், அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று வெற்றியடைவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், சிவசேனா, பாஜக வேட்பாளர்கள் இறுதி வாக்கு எண்ணிக்கையில் வெற்றிபெற்றது சற்று வித்தியாசமானது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கும்போது, முதலில் தபால் வாக்குகள்தான் எண்ணப்படும். அதன்பிறகே மற்ற வாக்குகளை எண்ணுவது நடைமுறையாக இருக்கிறது. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் சில மாற்றங்களை அறிமுகம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 5 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், அதை சரிபார்க்கும் விதமாக விவிபேட் இயந்திரத்தில் பதிவாகியுள்ள சின்னங்கள் அடங்கிய சீட்டுகளையும் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உத்தரவிட்டது.

விளம்பரம்

இவ்வாறு எண்ணும்போது, தபால் வாக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை. எனவே, முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணிவிட்டு, கடைசியாக தபால் வாக்குகளை எண்ணிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருந்தது. இதை பின்பற்றி, மகாராஷ்டிராவின் மும்பை வடமேற்கு தொகுதியில் மின்னணு வாக்குகள் எண்ணும்போது, உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா வேட்பாளர் அமல் கஞ்சனன் கிருத்திகர் முன்னிலையில் இருந்தார்.

இதையும் படிங்க : உ.பி.யில் சரிந்த பாஜக – யோகி ஆதித்யநாத்துக்கு சிக்கலா?

இறுதியாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது 48 வாக்குகள் வித்தியாசத்தில் ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வைகர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமல் கஞ்சனன் கிருத்திகர் 4,52,596 வாக்குகள் பெற்ற நிலையில், ரவீந்திர வைகர் 4,52,644 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதுதான் மகாராஷ்டிரா மாநிலத்திலேயே மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்ட வெற்றியாக இருக்கிறது.

விளம்பரம்

அதேபோல், ஒடிசாவின் ஜாஜ்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவீந்திர நாராயண் பெஹரா மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள வேட்பாளர் சர்மிஷ்தா ஷெட்டி இடையே கடும் போட்டி நிலவியது. இங்கும் மின்னணு வாக்குகள் என்ணப்பட்ட பிறகு, இறுதியாக தபால் வாக்குகளை எண்ணும்போது, பிஜு ஜனதா தள வேட்பாளரை விட, பாஜக வேட்பாளர் ரவீந்திர நாராயண் 496 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election 2024

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்