வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளது – உங்களின் மைன்ட் வாய்ஸ் ?

சென்னை – வடகிழக்கு பருவ மழை முன்பை விட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு வாங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்., 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வடகிழக்கு பருவ மழைக்கான பேரிடர் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் படகுகள் மண்டலம் வாரியம் நிறுத்தப்பட்டு, வெள்ளத்தின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் மண்டலம் 3க்கு ஒரு படகும், மண்டலம் 14க்கு இரு படகுகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள், இதனை பார்த்து சிரிப்பதா..? அழுவதா..? என்று தெரியவில்லை என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்