Modi 3.0 : 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

Modi 3.0 : 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்றார் பிரதமர் மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக உட்பட எந்த கட்சி தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்தது. இதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌவதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

விளம்பரம்

புதிய அரசு அமையும் வரை காபாந்து பிரதமராக செயல்படும்படி பிரதமர் மோடியை குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார். மேலும் இன்று (ஜூன் 09) 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவிற்கு உலகத்தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
delhi
,
PM Modi

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்