PMLA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் தரலாம் -உச்சநீதிமன்றம்

PMLA வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் தரலாம்! – உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கும் பிணை தரலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வழக்கு ஒன்றில் அறிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த பிரேம் பிரகாஷ் என்பவருக்கு, சொந்தமான இடங்களில் கடந்த 2022-ல் சோதனை நடந்தபோது, இரண்டு Ak47 ரக துப்பாக்கிகள் மற்றும் 60 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பண மோசடி, ஆயுதச் சட்டத்தின்கீழ் பிரேம் பிரகாஷ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிரேம், ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கலாம் என்று விதி, PMLA வழக்குகளுக்கும் பொருந்தும் என்றனர்.

விளம்பரம்இதையும் படிங்க: மாநிலங்களவையில் மீண்டும் பெரும்பான்மையை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி

PMLA வழக்கில் ஜாமின் வழங்குவது விதி என்றும், சிறை என்பது விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டனர். PMLA வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமின் பெறும் நடைமுறை கடுமையானது என்று கூறியுள்ள நீதிபதிகள், PMLA வழக்கில் விசாரணை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு அளித்த வாக்கு மூலங்கள் ஏற்கப்படாது என்றும், இது இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 25-ன் கீழ் தடை விதிக்கப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறினர்.

விளம்பரம்

PMLA வழக்கில் கைதான பிரேம் பிரகாஷுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் PMLA வழக்கில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Supreme court

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்