TDP, JDU மட்டுமல்ல.. அமைச்சர் பதவியை கேட்கும் கூட்டணி கட்சிகள்..

TDP, JDU மட்டுமல்ல.. அமைச்சர் பதவியை கேட்கும் கூட்டணி கட்சிகள்.. பாஜகவிற்கு தொடரும் நெருக்கடி..

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்

தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைப்போல் பாஜக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் மத்திய அமைச்சர் பதவி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்காததால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளது.

ஏற்கனவே கூட்டணி அரசில் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி என மூன்று கேபினட் அமைச்சர் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேட்டிருப்பதாக தகவல் வெளியானது.

விளம்பரம்

மேலும் மக்களவை சபாநாயகர் பதவி மற்றும், உள்துறை, பாதுகாப்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய 4 கேபினட் அமைச்சர்கள், இரண்டு இணை அமைச்சர்கள் என மொத்தம் 6 அமைச்சர் பொறுப்புகளை தெலுங்கு தேசம் கட்சி, கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:
கூட்டணியால் பாஜக இழக்கப் போவது என்ன? நரேந்திர மோடியின் அடுத்த மூவ் என்ன?

இந்நிலையில் அவ்விருகட்சிகள் மட்டுமில்லாது, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் அமைச்சர் பதவிகளை கேட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஒரு இணை அமைச்சர் பதவியும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

இதேபோல் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஒரு அமைச்சர் பதவி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் வயிற்றில் உங்கள் நாளைத் தொடங்குவதற்கு ஏற்ற 5 ஆரோக்கியமான பானங்கள்.!
மேலும் செய்திகள்…

மகாராஷ்ட்ராவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மத்திய அமைச்சர் பதவி கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் கர்நாடகாவில் 2 மக்களவை தொகுதிகளை வென்ற பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யானின் ஜனசேனா கட்சி ஒரு அமைச்சர் பதவி கேட்பதாக சொல்லப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
NDA Alliance
,
PM Narendra Modi

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்