rajtamil

சென்னையில் அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் தனியார்மயமாகின்றன!

சென்னையில் அனைத்து பொதுக் கழிப்பிடங்களையும் தனியார்மயமாக்க சென்னை பெருநகர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 1,167 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு மார்க்கெட், பெசன்ட் நகர் கடற்கரை, கிண்டி ரயில் நிலையம் என…

Read more

செவிலியர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: 4 காவல் அதிகாரி, 2 அரசு அதிகாரி கைது!

மகாராஷ்டிரத்தில் செவிலியர் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட போக்குவரத்து காவல், மத்திய தொழில்படை, மாநில ரிசர்வ் காவல் அதிகாரி என 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரத்தில் வசாய் பகுதியில் பணியிலிருந்த 6 காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையில் விடுப்பு எடுத்திருந்தனர்.…

Read more

சென்னையில் வருகின்றன தனியார் இடுகாடுகள், சுடுகாடுகள்!

மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், விரைவில், சென்னை மாநகருக்குள், அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் இடுகாடுகள், சுடுகாடுகள் அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கவிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் 230 இடுகாடுகளும், 42 சுடுகாடுகளும் எப்போதும் கூட்டமாக இருக்கும் நிலையில்தான், தனியார்…

Read more

புரி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி, 30 பேர் காயம்!

உ.பி.யில் இருந்து புரி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மஹமத்நகர் பாட்னா அருகேயுள்ள வயலில் புரிக்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலாப்…

Read more

தீவிரவாதத் தாக்குதலா? – மும்பையில் பலத்த பாதுகாப்பு!

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து மும்பை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. இதையடுத்து மும்பையில் மத வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெறும்…

Read more

குஜராத்தில் கனமழை: சுவர் இடிந்து 5 வயது சிறுவன் பலி!

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் 5 வயது சிறுவன் பலியானார். குஜராத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ரச்சர்டா கிராமத்தில் சனிக்கிழமையில் அதிகாலை பெய்த கனமழையின்போது, அங்கிருந்த ஒரு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.…

Read more

ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயில்! வைரலானதும் பதிவை நீக்கினார்! ஆனால்..

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களின் பெருமையை பதிவிடுவதாக எண்ணி பெரு நாட்டு ரயிலின் விடியோவை இணைத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். உலகம் முழுவதும் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27ஆம்…

Read more

நெல்லையில் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை! மக்கள் மகிழ்ச்சி!!

நெல்லையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும்…

Read more

2030-க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

ராணிப்பேட்டை: தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம்,…

Read more

கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது அரசு!

கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கரூர்,…

Read more