இலங்கை இடைக்காலப் பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டு, இன்று புதிய அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், ஹரிணி அமரசூரியா இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில், 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹரிணி. நீதி, கல்வி, தொழில்துறை அமைச்சராகவும், அதிபர் அநுர குமார திஸ்ஸநாயக முன்னிலையில், ஹரிணி அமரசூரியா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெருமுன கடசித் தலைவர் அநுர குமார திஸ்ஸநாயக திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார். புதிய அதிபர் பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வசதியாகவும் புதிய ஆட்சி சூழலுக்கு ஏற்ப புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஏதுவாகவும் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், புதிய இடைக்கால பிரதமராக ஹரிணி நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அதிபர் முன்னிலையில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!