10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

அடுத்தாண்டு நடைபெறும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அடுத்தாண்டு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

மத்திய காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 19 பேர் பலி

பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.7ல் தொடங்கி 14ஆம் தேதி முடிவடையும். அடுத்தாண்டு மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறும்.

பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்.15ல் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வு பிப்.22 தொடங்கி பிப்.28ஆம் தேதி வரை நடைபெறும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதியும், பிளஸ் 1, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிடப்படும்.

தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது